இன்று இந்தி திரைப்பட இயக்குநர் பால்கி ( shamitabh,cheeni kum,paa,ki & ka films director ) அவர்களின் இயக்கத்தில் https://youtu.be/-K9ujx8vO_A அக்சய் குமார் (Hindi actor Akshay Kumar) நடிப்பில் தயாராகி வரும் PAD Man திரைப்படத்தின் மின்னோட்டத்தை பார்த்தேன்.அது https://en.m.wikipedia.org/wiki/Arunachalam_Muruganantham கோயமுத்தூரில் வாழும் முருகானந்தம் அவர்களின் உண்மை கதை.சாதாரண மனிதரான முருகானந்தம் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கினை கண்டுபிடித்த கதை. Padmasree விருது பெற்றவர். அந்த முருகானந்தத்தின் தோற்றத்தை பார்க்கும் போது இந்தி சினிமாவின் நவரச நாயகன் Nawazuddin Siddiquiநடித்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தமிழில் திரைப்படம் தயாரிக்கப்படும் என்றால் என்னுடைய சாய்ஸ் முண்டாசுப்பட்டி முனிஸ்காந்த் தான். மிக சரியான தேர்வு. ஆனால் வியாபாரக்காரணங்களுக்காக அது கடைசியாக விஜய் சேதுபதியிடம் போய் நிற்கும். குறையொன்றுமில்லை. முருகானந்தம் அவர்களின் பேட்டி யு டியூப்பில் காணக்கிடைக்கிறது. அதை காண்பவர்கள் நான் எண்ணுவதை உணரக்கூடும். வியாபாரக்காரணங்களுக்காக இந்தி திரைப்படத்தில் Akshay Kumar -Indian actorஇடம்பெற்று இருக்கலாம். அக்சய்யின் எட்டு கட்டுகள் கொண்ட உடற்கட்டு அந்த கதாபாத்திரத்திற்கு சிறிது கடினத்தன்மையை தருகிறது. எனினும் PAD Man படத்தின் முன்னோட்டத்தில் காணக்கிடைக்கும் படத்தின் துண்டுக்காட்சிகளில் இடம் பெறும் லோகேஷன் மிக கவர்ச்சிகரமாக,பிரமாண்டமாக உள்ளது.வழக்கம் போல் கேமரா கவிஞர் PC Sriram கலக்கியிருக்கிறார்.
Commenti